உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / என்.எஸ்.எஸ்., மாணவர்கள் கரும்பு பண்ணைக்கு களப்பயணம்

என்.எஸ்.எஸ்., மாணவர்கள் கரும்பு பண்ணைக்கு களப்பயணம்

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் கரும்பு ஆராய்ச்சி பண்ணைக்கு களப்பயணம் மேற்கொண்டனர்.கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., சார்பில், ஏழு நாள் சிறப்பு முகாம் நடந்து வருகிறது. 5 நாள் முகாமில், என்.எஸ்.எஸ்., மாணவர்கள் கரியமாணிக்கம் வேளாண் அலுவலகத்தில் உள்ள கரும்பு உழவியல் ஆராய்ச்சி பன்ணைக்கு களப்பயணம் மேற்கொண்டனர்.பள்ளி துணை முதல்வர் தில்லைக்கண்ணு காமராஜ் தலைமை தாங்கினார். வேளாண் அலுவலர் திருநாடன் மாணவர்களுக்கு இயற்கை விவசாயம், பாரம்பரிய உணவு முறை, விவசாய பண்ணையின் நோக்கம் குறித்து விளக்கினார். செயல் விளக்க உதவியாளர் இருதயராஜ் கரும்பு சாகுபடி, புதுரக கரும்பு வகைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்து அனைத்து கரும்பு வகைகளை மாணவர்களுக்கு காண்பித்தார்.ஆசிரியர் ஜெகதீசன் மாணவர்களை வழிநடத்தினார். ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் எழில்வேந்தன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ