உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலையில் கழிவுநீர் தேங்கியதை கண்டித்து நுாதன போராட்டம்

சாலையில் கழிவுநீர் தேங்கியதை கண்டித்து நுாதன போராட்டம்

புதுச்சேரி : வாதானுார்காலனியில் சாலையில் தேங்கிய கழிவுநீரை உடனடியாக வெளியேற்ற வலியுறுத்தி, பொதுமக்கள், சிறுவர்கள் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.மண்ணாடிப்பட்டு தொகுதி வாதானுார்காலனியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் வீடுகளில் இருந்து வெளியேற்றும் கழிவுநீர்செல்ல, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சிமென்ட் சாலையுடன்கூடிய கழிவு நீர் வாய்க்கால் அமைக்கப்பட்டது.ஆனால், சரியான திட்டமிடல் இல்லாததால் தண்ணீர் வெளியேற வழியின்றி, கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதுடன், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது.இதையடுத்து, அப்பகுதி கழிவுநீர் வெளியேர கடந்த ஆண்டு பாட்கோ மூலம் புதிதாக 'ப' கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி துவங்கப்பட்டது. ஆனால், அப்பணியும்கடந்த சில மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.இந்நிலையில், புதிய கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியினை விரைந்து முடிக்கவும், சாலைகளில் கழிவுநீர் தேங்காமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நேற்று நுாதன முறையில் சாலையில் தேங்கிய கழிவுநீரில் குடும்பத்துடன் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும், கழிவுநீரை வெளியேற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையேனில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை