நுால் வெளியீட்டு விழா
புதுச்சேரி : தாகூர் கலைக் கல்லுாரியின் முன்னாள் முதல்வர் ராஜன் எழுதிய 49வது 'இளைஞர்கள் முன்னேற 100 வழிகள்' நுால் வெளியீட்டு விழா நடந்தது.புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் நடத்த விழாவில், 'இளைஞர்கள் முன்னேற 100 வழிகள்' என்ற நுாலை முன்னாள் எம்.பி., ராமதாஸ் வெளியிட்டு வாழ்த்திப் பேசினார். அந்தோணிசாமி தலைமை தாங்கினார். முனைவர் திருமலைவாசன் நுாலை அறிமுகம் செய்து வைத்தார்.காரைக்கால் மாவட்ட ஓய்வு பெற்ற கூடுதல் ஆட்சியர் தினேஷ் மங்கலாட், கலைமாமணி அறிமதி இளம்பரிதி, கலைமாமணி சுந்தர முருகன், ஸ்ரீராம், குலசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். துபாயில் இருந்து ரகுபதி இணைய வழியில் வாழ்த்தி பேசினார்.இதில், கிருஷ்ணமூர்த்தி, சுப்ரமணியர், ராமச்சந்திரன், கந்தசாமி, சரளாதேவி, இளவரசி, ஷர்மிளா, இளங்கோ, லட்சுமி பிரியா, பாரதி பிரியா, சிநேக பிரியா, மற்றும் ரியா ஜெயபாலன் ஆகியோர் நுால்களைப் பெற்றுக் கொண்டனர். டாக்டர் ஷர்மிளா ஜெயபாலன் நன்றி கூறினார்.