வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சினிமா போன்று ரௌடிகள் மீதுதான் இவர்களுக்கு காதல் வருகிறது. அதற்கான பலனை அனுபவித்துத்தானே ஆக வேண்டும்.
மேலும் செய்திகள்
நர்ஸ் கொலை வழக்கு 2 பேரிடம் விசாரணை
27-Sep-2026
வில்லியனுார்: வில்லியனுார் அருகே, ஜெயஸ்ரீ, 22, என்பவரை, வெட்டி கொலை செய்த அவரது காதலன் கலைக்குமார், 27, என்பவரை, போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி மாநிலம், வில்லியனுார், பிரியதஷ்ணி நகர் பகுதியில், இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். வில்லியனுார் போலீசார் விசாரித்தனர். அதில், கொலை செய்யப்பட்ட பெண், கோபாலன்கடையைச் சேர்ந்த தனுஷ்கோடி மகள் ஜெயஸ்ரீ என்பதும், பி.எஸ்.சி., நர்சிங் முடித்து, நெல்லித்தோப்பு பகுதியில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்ததும் தெரிந்தது. மேலும், அதேபகுதியைச் சேர்ந்த ரவுடி கலைக்குமாரும், ஜெயஸ்ரீயும் காதலித்துள்ளனர். சமீபத்தில் குண்டர் சட்டத்தில், சிறைக்கு சென்று வந்த கலைக்குமாரிடம் பேசுவதை ஜெயஸ்ரீ நிறுத்தியுள்ளார். இதில், கோபமடைந்த கலைக்குமார், நேற்று, மதியம், ஜெயஸ்ரீயை வீட்டின் வெளியே அழைத்து வந்து, கத்தியால் வெட்டி கொலை செய்து, தப்பியதும் தெரிந்தது. போலீசார், வழக்கு பதிந்து, கலைக்குமாரை தேடி வருகின்றனர்.
சினிமா போன்று ரௌடிகள் மீதுதான் இவர்களுக்கு காதல் வருகிறது. அதற்கான பலனை அனுபவித்துத்தானே ஆக வேண்டும்.
27-Sep-2026