உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலம்

 ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலம்

புதுச்சேரி: முத்தியால்பேட்டை அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்டம் - 4 சார்பில், 9வது தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு ஊர்வலம் முத்தியால்பேட்டை அங்கன்வாடி மையத்தில் நடந்தது. விக்னேஷ்கண்ணன் எம்.எல்.ஏ., விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஊர்வலத்தில், கர்ப்பிணி பெண்கள், பாலுாட்டும் தாய்மார்கள், குழந்தைகள், வளர் இளம் பெண்கள் அனைவரும் முறையான உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமான உணவுகள், காய்கறிகள், பழங்கள், பின்பற்ற வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் காய்கறி வேடமிட்டும், முளைப்பாரி எடுத்தும், விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகள் ஏந்தி, ஊர்வலமாக சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி