உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரான்ஸ் தேசிய தினம் கடைப்பிடிப்பு 

பிரான்ஸ் தேசிய தினம் கடைப்பிடிப்பு 

புதுச்சேரி: புதுச்சேரியில் 237 வது பிரான்ஸ் தேசிய தினம் கடைபிடிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் கடந்த 1789-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி மக்கள் புரட்சியின் மூலம் மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, மக்களாட்சியை நிறுவப்பட்டது. அதன் காரணமாக, ஆண்டுதோறும் ஜூலை மாதம் 14-ம் தேதி பிரான்ஸ் தேசிய தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, புதுச்சேரியில் 237-வது பிரான்ஸ் தேசிய தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி கடற்கரைச் சாலையில் உள்ள போர் வீரர் நினைவுத் துாணில் புதுச்சேரிக்கான பிரான்ஸ் நாட்டுத் துணைத் துாதர் ஜீன்-பிலிப் ஹூதர், அரசு சார்பில் கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதில், இந்தியா, பிரான்ஸ் நாட்டு தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு, தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை