பொதுப்பணித்துறை ஆய்வாளர் பணி நிறைவு
புதுச்சேரி: பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்டம், பணி ஆய்வாளர் கிருஷ்ணராஜிக்கு நேற்று முன்தினம் பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. பொதுப்பணித்துறையில் 40 ஆண்டுகளாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஆய்வாளர் கிருஷ்ணராஜிக்கு அலுவலகத்தில் பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில் இளநிலை கணக்கு அதிகாரி ரவிச்சந்திரன், பணி உதவியாளர் பத்பநாபன், அலுவலக ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.