மேலும் செய்திகள்
பொதுமக்களிடம் எஸ்.பி., குறை கேட்பு
17-Aug-2025
திருக்கனுார் : திருக்கனுார் போலீஸ் நிலையத்தில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடந்தது. டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, உடனடியாக அதனை நிவர்த்தி செய்யும் நடவடிக்கை மேற்கொண்டனர்.மேற்கு எஸ்.பி., சுப்ரமணியன், இன்ஸ்பெக்டர் ராஜகுமார், சப் இன்ஸ்பெக்டர்கள் பிரியா, தமிழரசன் மற்றும் போலீசார் உடனிருந்தனர். இதேபோல், உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் சீனியர் எஸ்.பி., கலைவாணன், மேட்டுப்பாளையத்தில் வடக்கு எஸ்.பி., ரகுநாயகம், அரியாங்குப்பத்தில் தெற்கு எஸ்.பி., செல்வம், போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் எஸ்.பி., ரச்சனா சிங் ஆகியோர் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்தனர். இதில், பொது மக்களிடம் இருந்து 52 புகார்கள் பெறப்பட்டு, 31 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மக்கள் மன்றத்தில் 19 பெண்கள் உட்பட 128 பேர் பங்கேற்று புகார்களை தெரிவித்தனர்.
17-Aug-2025