உள்ளூர் செய்திகள்

முதியவர் தற்கொலை

காரைக்கால் : காரைக்காலில் கிட்னி பிரச்னையால் அவதிப்பட்டுவந்த முதியவர் துாக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.காரைக்கால் அடுத்த நல்லெழுந்துார் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி, 74; கூலி தொழிலாளி . இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கிட்னி பிரச்னை ஏற்பட்டு சரியாக சிறுநீர் பிரியாததால் வயிற்று வலியால் அவதிப்பட்டுவந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வலி அதிகமானதால் முனமுடைந்த அவர் வீட்டு மாடியில் உள்ள கம்பியில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். புகாரின் பேரில் அம்பகரத்துார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை