சாலை விபத்தில் முதியவர் பலி
பாகூர் : குறுக்கே ஓடிவந்த மாட்டின் மீது பைக் மோதியதால், நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.பாகூர் அடுத்துள்ள குருவிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி 69; இவர் நேற்று முன்தினம் மாலை குருவிநத்தம் -- முள்ளோடை சாலையில் தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக சென்ற மாடு திடீரென குறுக்கே ஓடி, பைக் அதன் மீது மோதியதால், தண்டபாணி நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.