உள்ளூர் செய்திகள்

மூதாட்டி தற்கொலை

வில்லியனுார்: வில்லியனுாரில் மகனிடம் கோபித்துக் கொண்டு தாய் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.வில்லியனுார், கிருஷ்ணா நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் கங்காபாய், 65. இவர் கடந்த சில வருடங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தனது மகனிடம் கோபித்துக் கொண்டு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !