மூதாட்டி தற்கொலை
புதுச்சேரி: உறுவையாறு பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசி, 72. இவர், கண்ணில் புரைக்கு சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் கண்ணில் ஏற்பட்ட அதிக வலியால் மனமுடைந்த தமிழரசி அவரது வீட்டில் நேற்று முன்தினம் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.