உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அனைத்து தெருக்களிலும் குப்பை தொட்டி ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்

அனைத்து தெருக்களிலும் குப்பை தொட்டி ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்

புதுச்சேரி : புதுச்சேரியில் அனைத்து தெருக்களிலும் குப்பை தொட்டிகள் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரியில் 10 ஆண்டுகளாக குப்பை அள்ளும் பணியை மேற்கொண்ட ஸ்வச் பாரத் நிறுவன டெண்டர் முடிந்து, கிரீன் வாரியர் நிறுவனம் குப்பை அள்ளும் பணியை தற்போது துவங்கி உள்ளது.ஜூலை 1ம் தேதியில் இருந்து புதிய நிறுவனம் குப்பைகள் அள்ளும் பணியை மேற்கொள்ளப் போகிறது என, தெரிந்தும், எந்தவித முன்னேற்பாடுகளையும் செய்யாமல் அலட்சிய போக்குடன் அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர். போதிய அளவில் குப்பை தொட்டிகள் தெருக்களில் வைக்கப்படாமல் குப்பைகள் வீதியில் கொட்டப்படும் அவலம் உள்ளது.லாரிகள் வந்து செல்லும் பெரிய தெருக்களில் மட்டும் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. சிறிய தெருக்களில் குப்பைகளை போடும் இடங்களில் தொட்டிகள் வைக்கப்படவில்லை. புதிய நிறுவனம் பொறுப்பேற்கும் போது எத்தனை இடங்களில் தொட்டிகள் வைக்க வேண்டும் என்ற முன்னேற்பாடுகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சித் துறை அதிகாரிகள் செய்து இருக்க வேண்டும்.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரியின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, போர்க்கால அடிப்படையில் அனைத்து தெருக்களிலும் குப்பை தொட்டிகள் வைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ