உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆம்னி பஸ் கட்டணத்தை கட்டுப்படுத்த கோரிக்கை

ஆம்னி பஸ் கட்டணத்தை கட்டுப்படுத்த கோரிக்கை

புதுச்சேரி: ஆம்னி பஸ் கட்டணத்தை நடைமுறைப்படுத்தக் கோரி, வடதமிழ்நாடு அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இயக்கத்தின் இணைச் செயலாளர் ரமேஷ் தலைமையில் புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கனிடம் கொடுத்துள்ள மனு; பொதுமக்கள், வணிக வியாபாரம் செய்பவர்கள், கல்லுாரி மாணவர்கள், சிறு, குறு தொழிலுக்காக ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் சென்னை, திருச்சி, புதுச்சேரி ஆகிய முக்கிய ஊர்களுக்கு பண்டிகை காலங்களில் அரசு பஸ்கள், ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர் அப்போது அரசு பஸ் மற்றும் ரயிலில் இடம் கிடைக்காமல், பொதுமக்கள் மற்றும் வெளியூரில் படிக்கும் மாணவர்கள் ஆம்னி பஸ்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதனை பயன்படுத்திக் கொண்ட ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அரசு நிர்ணயித்த தொகையை விட அதிகமாக வசூல் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாட்களில் பயணச்சீட்டு ஒரு விலையும், மற்ற நாட்களில் ஒரு விலை என நிர்ணயித்து தாறுமாறாக விலையை ஏற்றி பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றனர். எனவே அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி அரசு நிர்ணயித்த பயணச்சீட்டு கட்டணத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை