உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நளன் குளத்தில் மூழ்கி ஒருவர் சாவு

நளன் குளத்தில் மூழ்கி ஒருவர் சாவு

காரைக்கால் : காரைக்கால் திருநள்ளாறு நளன் குளத்தில் யாசகர் ஒருவர் தண்ணீர் மூழ்கி உயிரிழந்தார்.காரைக்கால், திருநள்ளாறு தர்பார்னேஸ்வரர் கோவிலில், தனி சன்னதியில் சனி பகவான் அருள் பாலித்து வருகிறார். பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர். அதே போல், பல்வேறு இடங்களில் இருந்து யாசகர்கள் பலர் திருநள்ளாறு வருகின்றனர். இதனிடையே நேற்று திருநள்ளார் நளன் குளத்தில் 50 வயது மதிக்கத்தக்க யாசகர் ஒருவர் குளிக்க சென்ற போது, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்த திருநள்ளாறு போலீசார் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து இறந்தவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை