டிராக்டர் மோதி ஒருவர் பலி
வில்லியனூர் : கூனிச்சம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை, 69; இவர் நேற்று மதியம் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் அய்யனார், 65; என்பவருடன் பைக்கில் பி.எஸ்.பாளையம் சென்றார். பின் இருவரும் மாலை வீட்டிற்கு வந்து கொண்டி ருந்தனர். பைக் வாதானுார் அருகே வந்தபோது, எதிரில் வந்த டிராக்டர் அய்யனார் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஏழுமலை மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். காயமடைந்த அய்யனார் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். விபத்து குறித்து வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.