ஆன்லைன் கும்பல் ரூ. 5.50 லட்சம் மோசடி
புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ. 5.50 லட்சம் மோசடி செய்த ஆன்லைன் கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி, கூடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவரிடம் அவர் பயன்படுத்தும் கிரெடிட் கார்டு மூலம் ரூ. 2.49 ஆயிரத்தை ஆன்லைன் கும்பல் ஏமாற்றியுள்ளனர். அதே போல் சொக்கநாதன் பேட்டைச் சேர்ந்த ஒருவரிடம் ஏ 4 ஷீட் குறைந்த விலையில் தருவதாகவும், அதற்கு ரூ. 56 ஆயிரம் கட்ட வேண்டும் எனக் கூறி ஆன்லைன் மூலம் ஏமாற்றியுள்ளனர். லாஸ்பேட்டையைச் சேர்ந்தவரிடம் ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்ட நபர் தட்டச்சு வேலை வாங்கி தருவதாக கூறி, அதற்கு செயலாக்க கட்டணமாக ரூ.2.97 ஆயிரம் பெற்று ஏமாற்றியுள்ளார். இதுகுறித்த புகார்களின் பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.