மேலும் செய்திகள்
இன்றைய மின்தடை
6 minutes ago
தெலுங்கானா தொழிலாளி சாவு
6 minutes ago
வெங்கடேஸ்வரா கல்லுாரியில் மருத்துவர்கள் மாநாடு
6 minutes ago
காங்., சட்டப்பிரிவு சார்பில் அரசியலமைப்பு தின விழா
7 minutes ago
புதுச்சேரி: தி.மு.க., மட்டுமே வளமான புதுச்சேரியை உருவாக்க முடியும் என, தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., பேசினார். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தட்டாஞ்சாவடி தொகுதி தி.மு.க. சார்பில், நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், அவர் பேசியதாவது: பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் சிறிய மாநிலமான புதுச்சேரி மிகப்பெரிய வளர்ச்சியடையும் என்று பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட மத்திய அமைச்சார்கள் கூறினர். மேலும் புதுச்சேரியை சிங்கப்பூர் ஆக்குவோம் என்றனர். ஆனால் 5 ஆண்டுகளில் 19 பொதுத்துறை நிறுவனங்கள் மூடியது தான் அவர்களது சாதனை. புதுச்சேரி மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் ஜனநாயக ஆட்சி அமைய வேண்டும். அப்போது தான் மக்கள் எதிர்பார்த்தபடி வளமான, வலிமையான புதுச்சேரியை உருவாக்க முடியும். அதனை தி.மு.க.,வால் மட்டுமே செய்ய முடியம். இதற்கு கடந்த தி.மு.க., ஆட்சியின் சாதனைகளே சாட்சியாக உள்ளன. புதுச்சேரியில் மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் புதிய தொழிற்கொள்கைகள் மூலம் தொழிற்சாலைகள் வரும். வேலைவாய்ப்பு பெருகும். ரயில்வே திட்டங்கள் மேம்படும். விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும். துறைமுகத்தை மீட்டெடுத்து மாநில வருவாய் பெருக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
6 minutes ago
6 minutes ago
6 minutes ago
7 minutes ago