உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கணிணி வகுப்பறை திறப்பு

கணிணி வகுப்பறை திறப்பு

அரியாங்குப்பம்: தவளக்குப்பம் அடுத்த தானாம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பயிலும் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணினி அறிவை வளர்க்கும் வகையில், 2.5 லட்சம் ரூபாய் மதிப்பில் , புதிய கணிணி வகுப்பறை கட்டப்பட்டது. சபாநாயகர் செல்வம் வகுப்பறை மற்றும் பள்ளி அறிவிப்பு பலகையை திறந்து வைத்தார்.தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட இலவச சைக்கிள்கள், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழை சபாநாயகர் வழங்கினார்.நிகழ்ச்சியில், கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி, பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !