உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதிய உபகரணங்களுடன் சமையல் கூடம் திறப்பு

புதிய உபகரணங்களுடன் சமையல் கூடம் திறப்பு

புதுச்சேரி: சண்முகாபுரம் மைய சமையல் கூடத்தில் முட்டை அவிப்பதற்காக புதிய உபகரணங்கள் பொருத்தப்பட்ட சமையல் கூடத்தை அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார்.புதுச்சேரி அரசு கல்வித்துறை மூலம் மாணவர்களுக்கு மதிய உணவில் வாரம் மூன்று நாட்கள் முட்டைகளை வழங்கி வருகிறது.இதற்காக, மூன்று சமையல் கூடங்களிலிருந்து முட்டைகள் அவிக்கப்படுகிறது. தற்போது, கல்வித்துறை முட்டைகளை அவிப்பதற்காக ஏம்பலம் மற்றும் சண்முகாபுரத்தில் புதிய உபகரணங்கள் பொருத்திய சமையல் கூடத்தினை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று துவக்கி வைத்தார். இதில், ரமேஷ் எம்.எல்.ஏ., கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி, இணை இயக்குனர் சிவகாமி, மதிய உணவுத் திட்ட துணை இயக்குனர் கொஞ்சுமொழி குமரன், துணை இயக்குனர் சிவராமரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நவம்பர் மாதம் முதல் மாணவர்களுக்கு சண்முகாபுரம், ஏம்பலம் மைய சமையல் கூடங்களில் இருந்து முட்டைகள் நேரடியாக பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ