மேலும் செய்திகள்
மதுரையில் சுதந்திர தின கொண்டாட்டம்
17-Aug-2025
புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதியில் சுகாதாரமற்ற குடிநீரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மக்களை எதிர்க்கட்சி தலைவர் சிவா, தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் கோபால் ஆகியோர் பார்வையிட்டு ஆறுதல் கூறினர். உருளையன்பேட்டை தொகுதி, முடக்கு மாரியம்மன் கோவில் வீதி, அந்தோணியர் வீதி மற் றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுகாதாரமற்ற குடிநீரால், 20க்கும் மேற்பட்டோர் திடீரென வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். தகவலறிந்த எதிர்க்கட்சித் தலைவர் சிவா, தி.மு.க., தொகுதி பொறுப்பாளர் கோபால் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு சென்று, உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறி, சிகிச்சை குறித்து டாக்டரிடம் கேட்டறிந்தனர். தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில வர்த்தக அணி குரு, தொகுதி செயலாளர் தங்கவேல், மாநில பொறியாளர் அணி அர்ஜூன், கிளை செயலாளர் பிரகாஷ், ஆனந்து, ரமேஷ், வினோத், விக்னேஷ், ஜெயக்குமார், ராஜவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
17-Aug-2025