உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறப்பு பள்ளி ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தல்

சிறப்பு பள்ளி ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தல்

புதுச்சேரி: சட்டசபை பூஜ்ய நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேசியதாவது:புதுச்சேரி நான்கு பிராந்தியங்களிலும் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன், அரசு மூலம் தேர்வு செய்த 24 சிறப்பு ஆசிரியர்கள் ஒப்பந்த முறையில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் பணி நிரந்தரம் செய்ய தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.ஓய்வூதிய வயதை எட்ட சில ஆண்டுகள் உள்ள நிலையில் பணியாற்றும் ஒப்பந்த சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. சட்டசபையில் நாங்கள் கோரிக்கை வைத்தபோது, முதல்வர் பணி நிரந்தரம் செய்வதாக உறுதியளித்தார். ஆனால் இன்று வரை அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.சிறப்பு ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் சிக்கிம், நாகாலாந்து, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்துள்ளது.ஆனால் புதுச்சேரி அரசு தீர்ப்பின் அடிப்படையில் கண், காது, நரம்பு, மூளை வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவு சிறப்பு குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க 160 சிறப்பு ஆசிரியர்களை நிரப்புவதற்கான ஆர்.ஆர். டிராப்ட் வெளியிடப்பட்டுள்ளது.இதனால் ஏற்கனவே பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்கள் தங்களின் நிலை குறித்து அச்சம் அடைந்துள்ளனர். அவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் புதுச்சேரி அரசு 24 சிறப்பு ஆசிரியர்களையும் கருணை அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ