உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வரிகளை உயர்த்தும் மக்கள் விரோத போக்கை முதல்வர் கைவிட வேண்டும் எதிர்க்கட்சி  தலைவர் வலியுறுத்தல்

வரிகளை உயர்த்தும் மக்கள் விரோத போக்கை முதல்வர் கைவிட வேண்டும் எதிர்க்கட்சி  தலைவர் வலியுறுத்தல்

புதுச்சேரி : மகளிர் உதவித்தொகையை வரிகளை உயர்த்தாமல், மத்திய அரசிடம் நிதியை பெற்று வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சிவா முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.இதுகுறித்து அவரது அறிக்கை:2026ம் தேர்தலில் பெண்களின் ஓட்டுக்களை பெற முதல்வர், மகளிர் உதவித்தொகை ரூ.2,500 வழங்கப்படும் என, பட்ஜெட்டில் அறிவித்தார். இதற்கு, மத்திய அரசு நிதியுதவி வழங்கும் என, நினைத்தார். ஆனால், பா.ஜ., நிதி ஏதும் வழங்கவில்லை. பா.ஜ.,வின் உண்மை முகத்தை தெரிந்து கொள்ளாமல், நிதி நிலையை அறியாமல், மகளிர்களுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என, முதல்வர் அறிவித்துவிட்டு, தற்போது, மதுபான வரி, நில வழிகாட்டி மதிப்பு ஆகியவற்றை உயர்த்தி, அறிவித்த திட்டங்களை செயல்படுத்த மக்களிடமே பணம் பறிக்கத் துவங்கியுள்ளார்.கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மகளிர் உதவித்தொகை ரூ.2,500, மஞ்சள் கார்டு தலைவிகளுக்கு ரூ.1000, முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகளின் உதவி தொகைகளில் ரூ.500 உயர்வு ஆகியவைகளை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பது குறித்து எம்.எல்.ஏ., க்களின் கருத்துக்களை அறிய உடனடியாக முதல்வர் சட்டசபையை கூட்ட வேண்டும்.வரியில்லா பட்ஜெட் தாக்கல் செய்த பின், வரிகளை உயர்த்தும் மக்கள் விரோத போக்கை முதல்வர் கைவிட வேண்டும். மேலும், வரியை உயர்த்தாமல் மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற்று மகளிர் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி