நமது மக்கள் கழகம் கட்சி துணை தலைவர் நியமனம்
புதுச்சேரி: புதுச்சேரி நமது மக்கள் கழகம் கட்சியின் துணைத் தலைவராக சீதாராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., நேரு துவங்கிய நமது மக்கள் கழகம் கட்சியின் துணைத் தலைவராக வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் ஆணையர் சீதாராமன் நியமனம் செய்யப்பட்டார். நியமனம் செய்யப்பட்ட சீத்தாராமன், கட்சி தலைவர் நேரு எம்.எல்.ஏ.,வை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து, வாழ்த்து பெற்றார். நிகழ்ச்சியில், கட்சி பொருளாளர் செல்வம், நிர்வாகி மனோஜ், தொழிலதிபர்கள் ரகோத்தமன், ரஞ்சித்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.