உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கணுவாப்பேட்டை பள்ளியில் ஓசோன் விழிப்புணர்வு போட்டி

கணுவாப்பேட்டை பள்ளியில் ஓசோன் விழிப்புணர்வு போட்டி

வில்லியனுார்: கணுவாப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்னர்வீல் கிளப் சார்பில் உலக ஓசோன் தினம் விழிப்புணர்வு போட்டி நடந்தது.கணுவாப்பேட்டை அரசு உயர்நிலை பள்ளியில் இன்னர்வீல் கிளப் சார்பில் உலகஓசோன் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு குறித்த ஓவியம், பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.இதன் பரிசளிப்பு விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பத்மாவதி தலைமை தாங்கினார். ஆசிரியர் செழியன் முன்னிலை வகித்தார். இன்னர்வீல் கிளப் புதுச்சேரி தலைவி செந்தில்செல்வி, உப தலைவி முகுந்தமாலா, செயலாளர் கிரிஜா, உறுப்பினர்கள் சங்கீதா, சித்ரா ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.நிகழ்ச்சியில் வாஞ்சிநாதன் இளந்தொண்டர் மன்ற நிறுவனர் ராமன், ரஜினிமுருகன், ஒருங்கிணைப்பாளர் பரசுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி