உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக் மோதி ஓவியர் பலி 

பைக் மோதி ஓவியர் பலி 

புதுச்சேரி : திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முருகன், 40; ஓவியர். இவர், தனது நண்பர் அர்ஜூனன் ஆகியோர் நேற்று முன்தினம் பணி நிமித்தமாக புதுச்சேரி வந்தனர். பணி முடிந்து இரவு 10;00 மணிக்கு மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர்.திருவள்ளுவர் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே காரைக்காலைச் சேர்ந்த பாலமுருகன் 36, என்பவர் ஓட்டி வந்த பைக், முருகன் மீது போதியது. படு காயமடைந்த அர்ஜூனன், முருகன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் முருகன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.விபத்து குறித்து போக்குவரத்து கிழக்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி