உள்ளூர் செய்திகள்

பெயிண்டர் தற்கொலை

புதுச்சேரி: திலாஸ்பேட்டை வீமன் நகர், கருணா ஜோதி தெருவைச் சேர்ந்த சுரேஷ் மகன் சுரேந்தர் 23. பெயிண்டர். வேலை செய்யும்போது இவருக்கு தலையில் அடிப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக அவர் வேலைக்கு செல்லாமல், மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். நேற்று முன்தினம் திண்டிவனத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார். பின், சுரேந்தர் வீட்டில் துாக்குப் போட்டுக் கொண்டார். அவரை மீட்டு, கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோிதித்து அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில், டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ