உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஓவியப் போட்டி பரிசளிப்பு விழா

 ஓவியப் போட்டி பரிசளிப்பு விழா

புதுச்சேரி: புதுச்சேரி மாநில ஓவியர் மன்றம் மற்றும் புதுச்சேரி ஓவியப் பள்ளி சார்பில், வண்ணம் தீட்டும் போட்டி தட்டாஞ்சாவடி புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வண்ணம் தீட்டும் போட்டியில் கலந்து கொண்டனர். நடுவர்களாக ஓவிய ஆசிரியர்கள் அன்பழகன், கார்முகிலன் ஆகியோர் செயல்பட்டு 12 சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பங்குத் தந்தை கிளஸ்ட்ஸ் ரெக்ஸ், பெர்னார்ட் ஆகியோர் பரிகளை வழங்கி வாழ்த்தினர். ஏற்பாடுகளை ஓவியர்கள் செல்வம் எமில், ஜோசபின் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை