| ADDED : செப் 22, 2026 04:12 PM
புதுச்சேரி: பள்ளி கல்வி துறை சார்பில் நடந்த ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை துணை இயக்குனர் பாராட்டினார். புதுச்சேரி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச் சூழல் துறை, தேசிய நிலையான கடலோர மேலாண்மை மையம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் இணைந்து, புதுச்சேரி பள்ளி கல்வி துறை சார்பில், ‘துாய்மையான கடல்–பாதுகாப்பான கடல்’ என்ற தலைப்பில், பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடந்தது. புதுச்சேரியில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் இப்போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டிகளில், தெடாக்கப்பள்ளி பிரிவில், நாவற்குளம் அரசு தொடக்கப்பள்ளி மாணவர் ஹரிஷ் இரண்டாம் பரிசும், காலாப்பட்டு அரசு தொடக்கப்பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவி ஹர்ஷதா மூன்றாம் பரிசும் பெற்றனர். தொடர்ந்து நாவற்குளம் பள்ளி தலைமை ஆசிரியர், ராமதாஸ், காலாப்பட்டு பள்ளி தலைமை ஆசிரியை கனிமொழி பிரேம், வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன், துணை இயக்குனர்(பெண்கள் கல்வி) ராமச்சந்திரன், வட்டம் ஒன்றின் பள்ளி துணை ஆய்வாளர் அனிதா ஆகியோரிடம் வாழ்த்து பெற்றனர்.