உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஈஷா யோகா வகுப்பு 12ல் துவக்கம்

ஈஷா யோகா வகுப்பு 12ல் துவக்கம்

புதுச்சேரி : முத்தியால்பேட்டை ஆறுமுகா திருமண மண்டபத்தில் ஈஷா யோகா மையம் சார்பில் வரும் 12ம் தேதி மாலை 6 மணிக்கு யோகா வகுப்புகள் அறிமுக உரையுடன் துவங்குகிறது.தொடர்ந்து 18ம் தேதி வரை நடைபெறும் பயிற்சி வகுப்பில் நினைவாற்றல், முடிவெடுக்கும் திறனை அதிகரிக்கும் வழிமுறைகள், தொன்மையான ஷாம்பவி மகாமுத்ரா ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்களில் எந்தவித மாற்றமும் செய்யத் தேவையில்லை. பயிற்சியில் பங்கேற்க மதம், இனம், பிரிவுகள் ஏதும் தடையில்லை. பயிற்சி வகுப்புகள் காலை 6 மணி, 10 மணி, மாலை 6 மணி என மூன்று பிரிவுகளாக தினமும் 3 மணி நேரம் வீதம் 7 நாட்களுக்கு நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு, 98940 -22800, 94439 -60006 என்ற மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ