உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பங்குனி உத்திர திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

பங்குனி உத்திர திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

புதுச்சேரி: கவுசிக பாலசுப்ரமணிய கோவில், பங்குனி உத்திர விழாவில், பக்தர்கள்பால் குடம்எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.புதுச்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள சுப்பையா சாலையில், கவுசிக பாலசுப்ரமணிய கோவில், பங்குனி உத்திர திருவிழா நேற்றுநடந்தது.விழாவையொட்டி, காலை 7:00 மணியளவில் 108 பால்குடம், 50க்கும் மேற்பட்டகாவடிகள் எடுத்துபக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.தொடர்ந்து, சுவாமிக்கு பால் அபிேஷகம் நடந்தது. பின், அலங்காரம் செய்யப்பட்ட சுவாமிக்கு, சிறப்பு பூஜைகள் செய்து,மகா தீபராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.மாலை 5:00 மணியளவில், வள்ளியம்மையை யானை விரட்டும் காட்சி, தொடர்ந்து, அம்பாள் மாலை மாற்றல் நிகழ்ச்சி, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. சுவாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை