மேலும் செய்திகள்
இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமைகள்
4 minutes ago
ஒப்பந்த ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
7 minutes ago
மனதின் குரல் இன்று ஒலிபரப்பு
7 minutes ago
புதுச்சேரி: காகிதக்கூழ் கைவினை பொருட்கள் பயிற்சி முகாமினை, சிவசங்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். இந்திய அரசு, ஜவுளி அமைச்சகம், கைவினை அபிவிருத்தி ஆணையர் அலுவலகம், சார்பில், குரு சிஷ்ய கைவினைப் பயிற்சித் திட்டத்தின் கீழ் காகிதக்கூழ் கைவினைப் பொருள் பயிற்சி அளிக்க, புதுச்சேரி மாநில கூட்டுறவு கைவினை மற்றும் கைத்தறி இணையம் வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டது. இப்பயிற்சி முகாமின் துவக்க விழா மூலக்குளம் அடுத்த முத்துப்பிள்ளைப்பாளையத்தில் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக சிவசங்கர் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி பயிற்சி முகாமினை துவக்கி வைத்தார். கூட்டுறவு பதிவாளர் இளங்கோவன், புதுச்சேரி கைவினை அபிவிருத்தி சேவை மையம் உதவி இயக் குனர் ருப்சந்தர், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சாரங்கபாணி, ஆகியோர் கலந்து கொண்டனர். பயிற்சியில் பங்கேற்ற கைவினை கலைஞர்களுக்கு 2000 மதிப்புள்ள உபகரணங்கள் வழங்கப்பட்டது.தேசிய விருதாளரும், காகிதக்கூழ் தலைமை கைவினை கலைஞரான மோகன்தாஸ், பயிற்சி அளிக்க உள்ளார். இப்பயிற்சியில் கலந்துக் கொள்ளும் கைவினை கலைஞர்களுக்கு, நளொன்றுக்கு ரூ.300 வீதம், ௨ மாதங்களுக்கு 15,000 ரூபாய் உதவித் தொகையாக அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும்.
4 minutes ago
7 minutes ago
7 minutes ago