பழுது பார்க்கும் பணிக்காக பயணிகள் கப்பல் வருகை
புதுச்சேரி: புதுச்சேரி துறைமுகத்திற்கு பழுது பார்க்கும் பணிக்காக முதல் முறையாக பயணிகள் கப்பல் வந்துள்ளனது.புதுச்சேரி, உப்பளம் புதுதுறைமுக வளாகத்தில் கப்பல் மற்றும் படகுகள் பழுதுபார்க்கும் டைனமிக் இஞ்சினியரிங் கம்பெனி செயல்பட்டு வருகிறது.இங்கு பல்வேறு விதமான கப்பல்கள் மற்றும் மீன்பிடி விசைபடகுகள், கடலில் இருந்து ஏற்றி இறக்கும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில், நாகப்பட்டினம் - இலங்கை இடையே இயங்கி வந்த பயணிகள் 'சுகம் சிவகங்கை' என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் ஒன்று பழுதுபார்க்கும் பணிக்காக கடந்த 24ம் தேதி புதுச்சேரி டைனமிக் இன்ஜினியரிங் கம்பெனிக்குவந்துள்ளது.பயணிகள் கப்பல் ஒன்று பழுது பார்க்கும் பணிக்காக புதுச்சேரிக்கு வருவது இதுவே முதல் முறையாகும். அந்த கப்பலின் கீழ்த்தளத்தில் ஏற்பட்ட உடைப்பு மற்றும் பராமரிப்பு பணிக்காக புதுச்சேரிக்கு வந்துள்ளது.இந்த கப்பலில் ஏற்பட்டுள்ள பழுதுகள் ஒரு வாரத்தில் சரி செய்யப்பட்டு, மீண்டும் கடலுக்குள் இறக்கப்படும் என டைனமிக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.