உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பட்ஜெட்டில்  பழைய துறைமுகத்தில் பயணியர் முனையம்

பட்ஜெட்டில்  பழைய துறைமுகத்தில் பயணியர் முனையம்

புதுச்சேரி பழைய துறைமுகத்தில் ஏற்கனவே உள்ள கிடங்கு ஒன்றை சீரமைத்து அதில் கப்பல் பயணிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் தொடங்கப்படும்.  மாநில அளவிலான கடல்வழி, நீர்வழிகள் குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். புதுச்சேரி துறைமுகத்திற்கு சொந்தமான மண்வாரிக் கப்பலை பராமரிப்பு பணிகள் செய்து, துறைமுக கால்வாய் பகுதிகளை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படும்.  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் துறைமுகம் சார்ந்த தொழில் வளர்ச்சி, போக்குவரத்து மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் பொருட்டு, மத்திய அரசின், துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகத்தின், சாகர்மாலா 2.0 திட்டடத்தின் கீழ், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் துறைமுகம் சார்ந்த பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை