உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்சார ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் வட்டி, ஈவு தொகை வழங்கல்

மின்சார ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் வட்டி, ஈவு தொகை வழங்கல்

புதுச்சேரி: மின்சார ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் வட்டி, ஈவுத் தொகை, மளிகை தொகுப்பும் வழங்கப்பட்டது.புதுச்சேரி மின்சார ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்கம் கடந்த 39 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. இந்த சங்கத்தின் 1133 உறுப்பினர்கள் இயங்கி வருகின்றனர். இச்சங்கத்தின் தீபாவளி பண்டிகையொட்டி உறுப்பினர்களுக்கு 1000 ரூபாய் மதிப்புள்ள மளிகை தொகுப்பு வழங்கப்பட்டது. தலைவர் கருணாகரன் மற்றும் இயக்குனர்கள் வழங்கினர்.தலைவர் கருணாகரன் கூறும்போது, சங்கத்தில் நீண்ட கால கடனுதவியாக 25 லட்சம் வரையிலும், குறுகிய கால கடனுதவியாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படுகின்றது. அத்துடன் விழா கடனுதவியாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகின்றது. இது மட்டுமன்றி, மின் துறை ஊழியர்கள் இறந்தால் அவர்கள் வாங்கிய கடனில் 6 லட்சம் தள்ளுபடி செய்யப்படுகின்றது. அதேபோல் பணியின்போது மின் துறை ஊழியர்கள் இறந்தால் முழு கடனையும் தள்ளுபடி செய்கிறோம்.தீபாவளி பண்டிகையொட்டி வட்டி கழிவு, ஈவுத் தொகை அளிக்கப்பட்ட கையோடு, உறுப்பினர்கள் அனைவரும் 1000 ரூபாய் மதிப்புள்ள மளிகை தொகுப்பும் வழங்கப்பட்டது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை