உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பணி ஓய்வு பலன் வழங்கல்

பணி ஓய்வு பலன் வழங்கல்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு பி மற்றும் சி பிரிவு ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், சமூகநலத்துறையில் பணிபுரியும் முதுநிலை கணக்கு அதிகாரி கார்த்திக்கேயனுக்கு பணி ஓய்வு பலன் நிதி வழங்கப்பட்டது. புதுச்சேரி அரசு பி மற்றும் சி பிரிவு ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், சங்கத்தில் உறுப்பினராக உள்ள ஒவ்வொறு உறுப்பினர்களுக்கும் பணி ஓய்வு பெறும் போது ரூ. 10 ஆயிரம் ஓய்வு பலன் நிதிக்கான காசோலை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, புதுச்சேரி சமூகநலத்துறையில் முதுநிலை கணக்கு அதிகாரியாக பணிபுரியும் கார்த்திக்கேயன் வரும் 30ம் தேதி பணி ஓய்வு பெற உள்ளார். இவருக்கு சங்கத்தின் சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சங்கத் தலைவர் வினாயகமூர்த்தி, இயக்குனர்கள் புவியரசு, பழனிவேலு, செல்வம் ஆகியோர் பணி ஒய்வு பலன் நிதியாக ரூ. 10 ஆயிரத்திற்கான காசோலையை கார்த்திக்கேயனிடம் வழங்கினர். நிகழ்ச்சியில், சங்க உறுப்பினர் ஜாபர் சாதிக், கண்காணிப்பாளர் காமாட்சி, உதவியாளர் செல்வகுமார், முதுநிலை எழுத்தர் செந்தில், அலுவல உதவியாளர் தமிழ்செல்வன், தினக்கூலி ஊழியர் விக்னேஷ் ஆகியோர் கலந்து கொணடனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ