பண்டசோழநல்லுாரை வெள்ளம் சூழ்ந்தது மக்கள் வெளியேற்றம்
நெட்டப்பாக்கம்: பெஞ்சல் புயலை தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக புதுச்சேரியில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பின. இந்நிலையில் தமிழகத்தில் வீடூர் மற்றும் சாத்தனுார் அணை திறக்கப்பட்டது.சாத்தனுார் அணை திறக்கப்பட்டாதல் பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் கிளை ஆறான மலட்டாற்றில் உடைப்பு ஏற்பட்டு, பண்டசோழந்லுார் காலனியில் வெள்ளம் புகுந்தது.இதனால், அப்பகுதியில் இருந்த ஒட்டுமொத்த மக்களையும், அருகாமையில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.