உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மழை வெள்ளத்தில் சிக்கி தவித்த 19,850 பேர் மீட்பு நெகிழ்ச்சியுடன் மக்கள் நன்றி தெரிவிப்பு

மழை வெள்ளத்தில் சிக்கி தவித்த 19,850 பேர் மீட்பு நெகிழ்ச்சியுடன் மக்கள் நன்றி தெரிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் பெஞ்சல் புயல் மழை மற்றும் அணைகள் திறப்பால் 2 ஆறுகளின் கரையோரத்தில் உருவான வெள்ளத்தில் சிக்கிய தவித்த 19,850 பேரை, ராணுவம், பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர். வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக கடந்த 27 ம் தேதி முதல் புதுச்சேரியில் மிதமான மழை பெய்தது. புயல் கரையை கடந்த 30ம் தேதி இரவு கரையை கடந்தபோது, சூறை காற்றுடன் கன மழை கொட்டியது. ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தது. ஒரே நாளில் 50 செ.மீ., வரை மழை கொட்டிதால், புதுச்சேரி நகர பகுதி மட்டும் இன்றி கிராமங்களும் மழைநீரில் தத்தளித்தது.புதுச்சேரி நிர்வாகம், உடனடியாக ராணுவத்தின் உதவியை நாடியது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் 90 பேர், ராணுவத்தினர் 140 பேர் கொண்ட இரு குழுக்கள் படகுகள் மூலம் மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். புயல் மழை ஓய்ந்து விட்டது என நிம்மதி பெருமூச்சு விட்ட அடுத்த சில மணி நேரத்தில், வீடூர் மற்றும் சாத்தனுார் அணை திறப்பு செய்தி வெளியானது. இதனால் ஆறு கரையோர பகுதிகளுக்கு மீட்பு படைகள் விரைந்தது. அவசர கால தொடர்பு எண் மூலம் 650 பேர் தொடர்பு கொண்டு உதவி கேட்டனர். இதுதவிர, அரசு அதிகாரிகள், எம்.எல்.ஏ.,க்கள் கூறிய இடங்களில் சிக்கி தவித்த மக்களையும், ராணுவம் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் மீட்டு அருகில் உள்ள சமுதாய நலக்கூடம், பள்ளிகளில் தங்க வைத்தனர்.ரெயின்போ நகர், வெங்கட்டா நகரில் ராணுவமும், சோரியாங்குப்பம், பாகூர், டி.என்.பாளையம் உள்ளிட்ட பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். புதுச்சேரியில் கடந்த 30ம் தேதி முதல் நேற்று வரை இந்திய ராணுவத்தினர் 12,000 பேரையும், தேசிய பேரிடர் மீட்பு படையினர் 7,000 பேரையும் மீட்டனர். தவிர புதுச்சேரி தீயணைப்பு வீரர்கள் மூலம் 850 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ராணுவத்தினர் தங்களின் பணியை முடித்து கொண்டு நேற்று புறப்பட்டனர். தேசிய பேரிடர் மீட்பு படையினர் பாகூர், டி.என்.பாளையம் பகுதியில் மீட்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். புதுச்சேரி மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி, மீட்டு பத்திரமாக கரை சேர்த்த ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர், 'ரியல் ஹீரோக்கள்' என பொதுமக்கள் பாராட்டி, நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ