மேலும் செய்திகள்
பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை இன்றி பயணிகள் அவதி
30-Sep-2024
பாகூர் : புதுச்சேரி - கடலுார் சாலை பிள்ளையார்குப்பம் சந்திப்பு பஸ் நிறுத்த பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரி - கடலுார் சாலையில் பிள்ளையார்குப்பம் சந்திப்பில் தனியார் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை, பல்கலைக்கழகம், செவிலியர் கல்லுாரி, பல் மருத்துவ கல்லுாரி மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களும் இயங்கி வருகிறது.இங்கு, தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான நோயாளிகளும், மாணவ- மாணவிகள், தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், இங்குள்ள பஸ் நிறுத்த பகுதியில் இதுவரை பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளது.இதனால், பஸ்சிற்காக காத்திருக்கும் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மருத்துவமனைக்கு உடல் நிலை சரியில்லாமல் வரும் நோயாளிகள் பஸ் நிறுத்த பகுதியில் கால் கடுக்க நின்று தான் பஸ் பிடிக்க வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும், பிள்ளையார்குப்பம் கிராமத்திற்கு சரியான பஸ் போக்குவரத்து இல்லாததால், அப்பகுதி மக்கள், மெயின் ரோடு பஸ் நிறுத்தத்திற்கு சுமார் 2 கி.மீ., துாரம் நடந்து வந்து தான் பஸ் பிடிக்க வேண்டிய நிலை உள்ளது.அவ்வளவு துாரம் நடந்து வரும் கிராம மக்கள் அசதியை போக்கி கொள்ள அமர்ந்து ஓய்வெடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே, புதுச்சேரி - கடலுார் சாலை பிள்ளையார்குப்பம் பஸ் நிறுத்த பகுதியில் நோயாளிகள் மற்றும் பொது மக்களின் நலன் கருதி பயணியர் நிழற்குடை அமைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
30-Sep-2024