உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கிருமாம்பாக்கத்தில் மக்கள் மன்றம்

கிருமாம்பாக்கத்தில் மக்கள் மன்றம்

பாகூர் : கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் நடந்த மக்கள் மன்ற நிகழ்ச்சியில், சீனியர் எஸ்.பி., பிரிவின்குமார் திரிபாதி பங்கேற்று, பொது மக்களிடம் குறைகளை கேடறிந்தார்.புதுச்சேரியில் உள்ள போலீஸ் நிலையங்களில் சனிக்கிழமை தோறும் மக்கள் மன்ற நிகழ்ச்சியின் மூலமாக பொது மக்களிடம் குறைகள் கேட்கப்பட்டு தீர்க்கப்பட்டு வருகிறது. அதன்படி, கிருமாம்பாக்கத்தில் உள்ள புதுச்சேரி தெற்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் நேற்று மக்கள் மன்றம் என்ற குறை கேட்பு நிகழ்ச்சி நடந்தது. கூட்டத்தில், இன்ஸ்பெக்டர் தன்வந்திரி வரவேற்றார். போக்குவரத்து சீனியர் எஸ்.பி., பிரிவின்குமார் திரிபாதி பங்கேற்று, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.அப்போது, புதுச்சேரி - கடலுார் சாலையில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும். கிருமாம்பாக்கம் பகுதியில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்தப்படுவதால், விபத்தில் நடக்கிறது. பிள்ளையார்குப்பம் மகாத்மா காந்தி மருத்துவமனை அருகே சாலையோராக திறந்த நிலையில் உள்ள வடிகால் வாய்க்காலில் பாதுகாப்பு தடுப்பு சுவர் அமைக்கப்பட வேண்டும். ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்களும், சிறுவர்களும் வாகனங்களை ஓட்டுவதால், விபத்துக்கள் ஏற்படுகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்களை தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுப்படுதாக போலீசார் உறுதியளித்தனர். கூட்டத்தில், சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், இருதயநாதன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ