போலீஸ் நிலையங்களில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி
புதுச்சேரி: புதுச்சேரி டி.ஜி.பி., ஷாலினி சிங் அறிவுறுத்தலின்படி, புதுச்சேரியில் உள்ள போலீஸ் நிலையங்களில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. உருளையன்பேட்டை, போலீஸ் நிலையத்தில், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், மற்றும் எஸ்.பி., ஸ்ருதி, இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் பொதுமக்களின் புகார்களை பெற்று நடவடிக்கை எடுத்தனர். இதில், பங்கேற்ற நேரு எம்.எல்.ஏ., பல்வேறு பிரச்னைகள் குறித்து டி.ஐ.ஜி.,யிடம் பேசினார். இதேபோல், லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில், சீனியர் எஸ்.பி., கலைவாணன், காரைக்கால், நிரவி போலீஸ் நிலையத்தில் சீனியர் எஸ்.பி., லஷ்மி சவுஜன்யா, எஸ்.பி.,சுபம் சுந்தர் கோஷ், டவுன் போலீஸ் நிலையத்தில் எஸ்.பி., முருகையன், முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் எஸ்.பி., சிந்தா கோதண்டராமன், நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் எஸ்.பி., சுப்ரமணியன், புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில், எஸ்.பி., பக்தவாசலம், ஏனாம் பகுதியில் எஸ்.பி., வரதராஜன், மற்றும் மாகே பகுதியில் இன்ஸ்பெக்டர் அனில்குமார், சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன், ஆகியோர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுத்தனர். மக்கள் மன்றம் நிகழ்ச்சியில், நேற்று 43 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். நிலுவையில் உள்ள புகார்களுக்கு விரைவாக நடவடிக்கை எடுக்க போலீஸ் நிலைய அதிகாரிகளுக்கு மூத்த அதிகாரிகள் வழி காட்டுதல்களை வழங்கினர்.