உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தேர்தலில் போட்டியிட விருப்ப மனு மக்கள் முன்னேற்ற கழகம் அறிவிப்பு

 தேர்தலில் போட்டியிட விருப்ப மனு மக்கள் முன்னேற்ற கழகம் அறிவிப்பு

புதுச்சேரி: சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என, புதுச்சேரி மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: சட்டசபை தேர்தலில் புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிட உள்ளது. அதற்கான விருப்ப மனுக்கள் புதுச்சேரியைச் சார்ந்த தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. தேர்தலில் வேட்பாளராக களம் காண விருப்பம் உள்ள புதுச்சேரியைச் சார்ந்த குடிமக்கள் விண்ணப்பிக்கலாம். புதுச்சேரியைப் பற்றியும் அதன் மக்களைப் பற்றியும் அவர்களின் பிரச்னைகளைப் பற்றியும் சரியான புரிதல் உள்ள நன்கு படித்த இந்த மண்ணின் மீது உணர்வுள்ள நபர்களுக்கு தேர்தலில் வேட்பாளராக போட்டியிட முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பங்களை தட்டஞ்சாவடி, வி.வி.பி., நகரில் அமைந்துள்ளகட்சியின் தலைமை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அடுத்த மாதம் 10ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ