தீபாவளியையொட்டி பெத்தாங் போட்டி
புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் பெத்தாங் கிளப் சார்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு போட்டி நடந்தது. ரெட்டியார்பாளையத்தில், போட்டி, நாக் அவுட் முறையில் நடந்தது. இதன், இறுதி போட்டியில், மதன், நிரேஷ் அணியை, வேலு, ஜெனோ அணியினர் எதிர்கொண்டனர். விரு விருப்பான இறுதி ஆட்டத்தில் 15 புள்ளிகள் எடுத்து வேலு, ஜெனோ அணி முதல் பரிசு பெற்றது. அதில், மதன், நிரேஷ் அணி 11 புள்ளிகள் எடுத்து இரண்டாம் பரிசு பெற்றது. வெற்றிப்பெற்ற அணியினருக்கு பரிசு வழங்கப்பட்டது. போட்டியை, ரெட்டியார்பாளையம் பெத்தாங் கிளப் தலைவர் அமுதன், செயலாளர் காமராஜ், பொருளாளர் தேவன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.