உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுக்கு கூடுதல் உதவித்தொகை கோரி மனு

 அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுக்கு கூடுதல் உதவித்தொகை கோரி மனு

புதுச்சேரி: அறிவுசார் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகையை கூடுதலாக வழங்க வேண்டும் என, அறிவுசார் குறைபாடு உடையவர்களின் பெற்றோர்கள் அமைப்பு, முதல்வர் ரங்கசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளது. அமைப்பின் தலைவர் ஷீலா தலைமையில், செயலாளர் கண்ணன், நிர்வாகி ஆயிஷா உள்ளிட்டோர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர். அதில், சமூக நலத்துறை மூலம் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் குறைபாட்டின் சதவீத அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அறிவுசார் குறைபாடுகள் (மனவளர்ச்சி, மூளை முடக்கு வாதம்) உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவஉதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.இந்த உதவித்தொகை சதவீத அடிப்படையில் தான் வழங்கப்படுகிறது. இதில், அறிவுசார் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் சுயமாக செயல்பட இயலாத சூழ்நிலையில் உள்ளதால், இவர்களுக்கான மருத்துவ செலவினங்கள் அதிகமாக உள்ளதால், உதவித்தொகையை மருத்துவ சதவீத அடிப்படையில் இல்லாமல், அதிபட்சமாகவும், மாத உதவித்தொகையினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை