உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரூ.1.80 லட்சம் கையாடல் பெட்ரோல் பங்க் ஊழியர் கைது

ரூ.1.80 லட்சம் கையாடல் பெட்ரோல் பங்க் ஊழியர் கைது

பாகூர் : பெட்ரோல் பங்கில் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை, கையாடல் செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.பாகூர் அடுத்த சோரியாங்குப்பத்தில் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு, திருவந்திபுரம் அடுத்த ஓட்டேரியைச் சேர்ந்த ரவிச்சந்திரன், 30; என்பவர் கன்மேனாக வேலை செய்து வந்தார். சில நேரங்களில் அவர் கணக்கு வழக்கு பார்த்து வந்தார். கடந்த ஜூன் 28ம் தேதி முதல் ஜூலை 16ம் தேதி வரையில், பெட்ரோல், டீசல் விற்பனை கணக்கில், சிறுக சிறுக 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரை அவர் கையாடல் செய்து இருப்பது, பங்க் உரிமையாளர் ராஜாமணிக்கு தெரியவந்துள்ளது.கையாடல் செய்த பணத்தை திருப்பி தருவதாக கூறி வந்த நிலையில், ரவிச்சந்திரன் திடீரென தலைமறைவாகி விட்டார். இது குறித்து, பெட்ரோல் பங்கு உரிமையாளர் ராஜாமணி அளித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த ரவிச்சந்திரனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !