மேலும் செய்திகள்
புகார் பெட்டி
26-Feb-2026
அரியாங்குப்பம்: கடலுார் சாலையில் மண் குவியல் குவிந்து கிடப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். கடலுார் சாலை அரியாங்குப்பம் முதல் தவளக்குப்பம் வரை சாலையில் இரு புறங்களில் மண் குவியல் குவிந்து கிடக்கிறது. பஸ், லாரி போன்ற வாகனங்கள் செல்லும் போது, இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள், மண்ணில் சிக்கி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும், காற்று வீசும் போது, இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களின் கண்ணில் மீது மண் அடித்து அவதிப்பட்டு வருகின்றனர். அதே போன்று அரியாங்குப்பம், நோணாங்குப்பம், இடையார்பாளையம் ஆற்றுப்பாலத்தில் ஓரப்பகுதியில் மண் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. பல மாதங்களாக சாலையில் கிடக்கும் மண் குவியல்களை பொதுப்பணித்துறையின் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
26-Feb-2026