உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆன்மிக சுற்றுலா மையமாக புதுச்சேரியை மாற்ற திட்டம்

ஆன்மிக சுற்றுலா மையமாக புதுச்சேரியை மாற்ற திட்டம்

மதுரை:''புதுச்சேரியை ஆன்மிக சுற்றுலா மையமாக மேம்படுத்துவதற்கான முயற்சி நடந்து வருகிறது,'' என, மதுரையில் புதுச்சேரி துணைநிலை கவர்னர் கைலாஷ்நாதன் தெரிவித்தார்.மதுரையில், முருக பக்தர்களின் மாநாட்டை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகளின் அருட்காட்சியை, கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று பார்வையிட்டார். ஹிந்து முன்னணி சார்பில், அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. முருகனின் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சன்னிதியில் கவர்னர் தீபாராதனை காட்டி பூஜை செய்தார். அனைத்து படைவீட்டிற்கும் சென்று தரிசனம் செய்தார்.கவர்னர் கூறுகையில், ''புதுச்சேரியை ஆன்மிக சுற்றுலா மையமாக மேம்படுத்துவதற்கான முயற்சி நடக்கிறது. புதுச்சேரியை சுற்றிலும் பழமையான கோவில்களும், 21க்கு மேல் சித்தர் சமாதிகளும் உள்ளன. அவற்றை சுற்றுலா மையமாக மாற்ற ஆய்வு நடந்து வருகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ