உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மதகடிப்பட்டு மேம்பாலத்தில் பிளாஸ்டிக் பைப்புகள் திருட்டு

மதகடிப்பட்டு மேம்பாலத்தில் பிளாஸ்டிக் பைப்புகள் திருட்டு

திருபுவனை: விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில், மதகடிப்பட்டு மேம்பாலத்தில் மழை நீர் வடிய அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைப்புகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. இந்த சாலையில் பதுச்சேரி பகுதியான மதகடிப்பட்டில் நான்கு வழிச்சாலையின் இருபுறமும் 900 மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து பயன்பாட்டில் இருந்து வருகிறது.மேம்பாலத்தில் மழைநீர் வடிய தலா 7 மீட்டர் இடைவெளியில் பிளாஸ்டிக் பைப்புகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் இரவு நேரத்தில் அதில் இருந்த 20க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பைப்புகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அதே போல், கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்கப் பாலம் கட்டுமான பணிக்காக போடப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புடைய இரும்பு கம்பிகள் திருடுபோனது. தொடர் திருட்டை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை