உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பிளஸ் 2 மாணவர் மாயம்

 பிளஸ் 2 மாணவர் மாயம்

வில்லியனுார்: வில்லியனுாரில் தனியார் பள்ளிக்கு சென்ற மாணவர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வில்லியனுார், கூடப்பாக்கம் ரோடு மகாலட்சுமி நகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சரவணன். இவரது மகன் பரணிதரன், 17; தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். நேற்று முன்தினம் (21ம் தேதி) நீட் மாடல் தேர்வுக்காக வீட்டில் இருந்து சைக்கிள் மூலம் பள்ளிக்கு சென்ற பரணிதரன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய் புஷ்பா கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து பரணிதரனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை