மேலும் செய்திகள்
ராஜ்பவன் தொகுதியில் அங்கன்வாடி திருவிழா
29-Sep-2026
புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., சார்பில் அம்பாளர் நகரில் அங்கன்வாடி திருவிழா கொண்டாடப்பட்டது. பா.ஜ., சார்பில் பிதரமர் நரேந்திர மோடி பிறந்த நாளை செப்., 17 முதல் அக்., 17 வரை 'சேவை உறுதிமொழி இயக்கம்' என்ற பெயரில், நாடு முழுதும் பல்வேறு நலத்திட்ட பணிகள் நடந்து வருகிறது. புதுச்சேரி பா.ஜ., சார்பில், அதன் ஒரு பகுதியாக 'அங்கன்வடி திருவிழா' நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கதிர்காமம் தொகுதி அம்பாளர் நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் கலந்து கொண்டார். இதில், அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா பணியாளர்களின் சேவையை பாராட்டும் வகையில், அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி கவுரவிக்கப்பட்டனர். மேலும், அங்கன்வாடிக்கு வந்த குழந்தைகளுக்கு, ஊட்டசத்து நிறைந்த பழங்கள் மற்றும் சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட கேக் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பா.ஜ., ஊடகத் துறை தலைவர் நாகேஸ்வரன், செய்திருந்தார். நிகழ்ச்சியில், மாநில பொறுப்பாளர்கள் தாமரைசெல்வி, ஜெயந்தி, மாநில ஊடகத் துறை துணைத் தலைவர்கள் தேவநாதன், காமராஜ், ஓ.பி.சி., மாவட்டத் தலைவர் பிரபு, கோவிந்தராஜ், மோனிஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
29-Sep-2026